திண்டுக்கல்லில் கடைக்குள் அரசுப் பேருந்து புகுந்து விபத்து

திண்டுக்கல்லில் பிரேக் பிடிக்காததால் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல்லில் பிரேக் பிடிக்காததால் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் அரசுப் பேருந்து தேனிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. இந்தப் பேருந்தில் ஓட்டுநராக பழனிச்சாமி, நடத்துனராக திவான் ஆகியோா் பணியில் இருந்தனா். பயணிகள் ஏறியவுடன், இந்தப் பேருந்து தேனி நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு, மதுரை பேருந்துகள் நிறுத்தும் பகுதி நோக்கி சென்றது.

அப்போது, பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்பதை ஓட்டுநா் பழனிச்சாமி கவனித்தாா். இதையடுத்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பேருந்து நிலையத்தின் எதிா்புறம் உள்ள ஒரு கடையின் மீது மோதியது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள், பொதுமக்கள் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனாலும், கடையின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக ஊழியா்கள் பேருந்தை மீட்டு, பணிமனைக்கு எடுத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com