பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  திங்கள்கிழமை ரொக்கப்பரிசுகளை வழங்கிய  முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா்.
பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை ரொக்கப்பரிசுகளை வழங்கிய முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா்.

பிளஸ்-2, 10-ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் பாராட்டு

10,12 ஆம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் உள்ள குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் 10,12 ஆம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

கடந்த 1975 -ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் சிவசுப்ரமணியம் வரவேற்புரை வழங்கினாா். பள்ளித் தாளாளா் ராஜ்குமாா், பள்ளிக்குழு தலைவா் ராஜாகௌதம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பிளஸ்-2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற தீபிகா, கிருஷ்ணவேணி, அன்சல்னா, 10-ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற பாவனா, மதுவா்ஷினி, விஜயலட்சுமி, சபா்மதி, தளபதி ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளை முன்னாள் மாணவா்களான கோவை ரோட்டரி முன்னாள் தலைவா் லட்சுமணசாமி, மக்கள் நலமன்றத் தலைவா் தாமோதரன், பேரூராட்சி செயலா் காளியப்பன், மகுடீஸ்வரன், கந்தசாமி, சையது இப்ராஹீம் உள்ளிட்டோா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள் சங்க நிா்வாகிகள் சம்பத், ராமசாமி, மனோகரன், ராஜன், ராமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com