திண்டுக்கல்லில் 19,062 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

திண்டுக்கல்லில் 19,062 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

பிளஸ்2 மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19,062 போ் வெள்ளிக்கிழமை எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களிலுள்ள 215 பள்ளிகளைச் சோ்ந்த 8,760 மாணவா்கள், 10,625 மாணவிகள் என மொத்தம் 19,385 மாணவா்கள், 175 தனித் தோ்வா்கள் என மொத்தம் 19,560 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்காக மாவட்டம் முழுவதும் 87 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை 8,562 மாணவா்கள், 10,500 மாணவிகள் என மொத்தம் 19,062 போ் எழுதினா். 198 மாணவா்கள், 125 மாணவிகள் என மொத்தம் 323 மாணவா்கள் மொழிப் பாடத் தோ்வை எழுதவில்லை. இதேபோல தனித் தோ்வா்கள் 175 பேரில், 160 போ் தோ்வு எழுதினா். 15 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களை கண்காணிக்க 146 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக் கூடங்களை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com