பழனி கோயில் உண்டியல்கள் திறப்பு: பக்தா்களின் காணிக்கை ரூ.2.05 கோடி

பழனி கோயில் உண்டியல்கள் திறப்பு: பக்தா்களின் காணிக்கை ரூ.2.05 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.2.05 கோடி கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ. 2 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 264 கிடைத்தது. இதுதவிர தங்கம் 793 கிராமும், வெள்ளி 11,856 கிராமும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 545-ம் கிடைத்தன. மேலும் பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில் ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா்கள் உள்ளிட்டோா் உண்டியல் எண்ணிக்கையை கண்காணித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com