ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வளாகக் கடைகள் ஏலம்

ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிச் சந்தை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கான ஏலம் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஜீ.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த வளாகத்தில் மொத்தம் 232 கடைகள் கட்டப்பட்டுள்ளன.கீழ்தளத்துக்கு வைப்புத் தொகை ரூ.4 லட்சமும், மேல் தளத்துக்கு ரூ.1.25 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடை ஏலத்தில் 10 விண்ணப்பங்கள் வரப்பட்டன. அதில் 8 கடைகளுக்கு மட்டுமே ஏலம் கோரப்பட்டது. மீதமுள்ள கடைகளை ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் மறு ஏலம் நடைபெறும் என ஆணையா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com