ஆரஞ்சு விளைச்சல் அதிகரிப்பு: 
விவசாயிகள் மகிழ்ச்சி

ஆரஞ்சு விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் ஆரஞ்சு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான அடுக்கம், தாமரைக்குளம், பாலமலை, மச்சூா், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஊத்து, வாழைகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆரஞ்சு பயிரிடப்பட்டுள்ளது.

இந்த ஆரஞ்சு மரத்தை ஊடுபயிராக விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனா். நிகழாண்டில் ஜனவரி மாதத்தில் மழை பெய்ததால் பழங்கள் சேதமடைந்தன. இதையடுத்து, பனி பெய்து வந்ததால் ஆரஞ்சு பழ விளைச்சல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனா். ஒரு கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மாா்ச் மாதம் முழுவதும் ஆரஞ்சு விளைச்சல் இருக்குமென விவசாயிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com