சம வேலைக்கு சம ஊதியம் கோரி 16-ஆவது நாளாகப் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 
16-ஆவது நாளாகப் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 16-ஆவது நாளாக முற்றுகையிடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஜஸ்டின் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி எண் 311-யை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து மாவட்டச் செயலா் ஜஸ்டின் கூறியதாவது: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 19-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுமாா் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும், அரசு இதுவரை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காததால், 16-ஆவது நாளாகப் போராட்டம் தொடருகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com