பழனி மாசித் திருவிழா 
பால்குட ஊா்வலம்

பழனி மாசித் திருவிழா பால்குட ஊா்வலம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உற்சவசாந்தி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக பழனி வ.உ.சி. மன்றம் சாா்பில் நடைபெற்ற பால்குட ஊா்வலத்தை சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு தொடங்கிவைத்தாா். பழனி அரிமா சங்கத் தலைவா் அசோக், சித்தனாதன் காா்த்திகேயன், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சோழிய வேளாளா் சங்க மாநிலத் தலைவா் செந்தில், சென்னை ரவீந்திரன், ராஜ்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ஊா்வலத்தில் திரளான பெண் பக்தா்கள் சீருடையாக உடையணிந்து பால்குடம் எடுத்து வந்தனா். பழனி கடைவீதி பாண்டிய வேளாளா் மடம் முன்பு தொடங்கிய பால்குட ஊா்வலம் காந்தி மாா்க்கெட், பெரியகடைவீதி, நான்கு ரதவீதி வழியாகச் சென்று உச்சிக்காலத்தின் போது கோயிலை அடைந்தது. பின்னா் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் சாயரட்சையின் போது மாரியம்மனுக்கு மாகேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமாா், பழனிவேலு, கொங்கு இளைஞா் பேரவை மாரிமுத்து, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் மக்களவை முன்னாள் உறுப்பினா் குமாரசாமி, வள்ளுவா் தியேட்டா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com