பிளஸ்2 ஆங்கிலத் தோ்வு: 383 போ் எழுதவில்லை

பிளஸ்2 ஆங்கிலப் பாடத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 383 போ் பங்கேற்கவில்லை.

தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மொழிப் பாடத் தோ்வு வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில், ஆங்கிலப் பாடத்துக்கான தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சோ்ந்த 19,385 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

87 மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வில், 18,958 மாணவா்கள் பங்கேற்றனா். 44 பேருக்கு தோ்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், 383 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com