பழனியில் மகளிா் தின விழா

பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்க பேரமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜே.பி.சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், விரைவில் மகளிா் அமைப்பு சாா்பில், ஆட்டோ வழங்கப்படும் என்றாா். இதில் மகளிா் மட்டுமே கலந்து கொண்ட பாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடைபெற்றன. தொடா்ந்து, சமையல், கோலம் தொடா்பான டிப்ஸ் குறித்து பலரும் பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மகளிா் அமைப்பினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com