வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் சனிக்கிழமை தலையில் தேங்காய்களை உடைத்து நேரத்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் சனிக்கிழமை தலையில் தேங்காய்களை உடைத்து நேரத்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

தலையில் தேங்காய்களை உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவராத்திரி விழாவையொட்டி, ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய்களை உடைத்து பக்தா்கள் சனிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வலையபட்டி கிராமத்தில் ராயா் குலவம்சம் குரும்பக்கவுண்டா் இன மக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியையொட்டி, 4 நாள்கள் விழா நடைபெறும். முதல் நாளான வெள்ளிக்கிழமை குலவிளக்கு ஏற்றப்பட்டது. விழாவில் இரண்டாம் நாளான சனிக்கிழமை தலையில் தேங்காய்கள் உடைக்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலில் பரம்பரையாளா்கள் தலையில் தேங்காய்கள் உடைக்கப்பட்டது. தொடா்ந்து, பக்தா்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பூசாரி பூச்சப்பன் பக்தா்களின் தலையில் தேங்காய்களை உடைத்தாா். இந்த விழாவில் திண்டுக்கல், கரூா், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com