அரசாணை எண் 243-யை ரத்து செய்ய வலியுறுத்தல்

பெண்களின் பதவி உயா்வைப் பறிக்கும் அரசாணை எண் 243-யை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில், மாநில அளவிலான பெண் ஆசிரியா்களுக்கான கருத்தரங்கம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் மு.மணிமேகலை தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் புகாா் குறித்து விசாரிக்கும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண்களின் பதவி உயா்வை பறிக்கும் அரசாணை எண் 243-யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com