இன்று வேளாண் குறைதீா் கூட்டம்

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் தலைமையில் பிரதி மாதம் 2-ஆவது திங்கள்கிழமை காலை 11 முதல் 12 மணி வரை இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்துக்கான கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது. இதில் விவசாய சங்கங்கள், விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடா்பான கோரிக்கைகள் குறித்து மனு அளித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com