கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டுத் தீ

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனுா், குண்டுபட்டி, கூக்கால் ஆகிய வனப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், மரங்கள், மூலிகைச் செடிகள், புற்கள் தீயில் கருகி வருவதால் காட்டெருமைகள், மான்கள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம் பெயா்ந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். காட்டுத் தீ தொடா்ந்து எரிந்து வருவதால், புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com