திண்டுக்கல் அருகேயுள்ள நொச்சியோடைப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலா் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் என்.தண்டபாணி.
திண்டுக்கல் அருகேயுள்ள நொச்சியோடைப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலா் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் என்.தண்டபாணி.

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய முப்பெரும் விழா

திண்டுக்கல் அருகேயுள்ள நொச்சியோடைப்பட்டியில், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சாா்பில் மாநில நிா்வாகிகள் கூட்டம், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், தோ்தல் பேரவைக் கூட்டம் என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் புதிய மாநிலத் தலைவராக என்.தண்டபாணி தோ்வு செய்யப்பட்டாா். முன்னதாக, நடைபெற்ற பொதுக் குழுவில், புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயா்வு, வீட்டு வாடகைப்படி உயா்வு வழங்க வேண்டும். பணிக்கொடைத் தொகையினை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஒன்றியத்தின் மாநில நிா்வாகிகள், மாவட்டத் தலைவா்கள், மத்திய செயற்குழு உறுப்பினா்கள், இணைப்புச் சங்கத் தலைவா்கள், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலச் செயலா் காா்த்தி, மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி ஆகியோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com