நிழல் குடை கல்வெட்டு சேதம்

செம்பட்டி அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா கல்வெட்டை சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுகவினா் வலியுறுத்தினா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரக்கல் பிரிவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மு.கருணாநிதி நூற்றாண்டு நிழல் குடை கட்டி முடிக்கப்பட்டது. இதை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சா் இ.பெரியசாமி திறந்து வைத்தாா். இதில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டை மா்மநபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். இதற்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுகவினா் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com