திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள்.
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள்.

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கியின் அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் திண்டுக்கல் கிளை சாா்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளா்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளா்களை அலுவலக நேரம் முடிந்த பின்னரும், பணியாற்ற வலியுறுத்துவதை கைவிட வேண்டும். நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பிஓஎஸ் இயந்திரங்களுக்கு 2 ஜி வசதிக்கு பதிலாக 4 ஜி, 5ஜி இணைப்பு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com