சிறிய சமுதாயக் கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு

நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவரின் சொந்த செலவில், ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட சிறிய

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவரின் சொந்த செலவில், ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட சிறிய சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள திமுக உறுப்பினா் எஸ்.பி.முருகேசன், மணியக்காரன்பட்டி கிராமத்தில் உள்ள, உக்ரகாளியம்மன், முத்தாலம்மன் கோயில் வளாகத்தில், , தனது சொந்த செலவில் ரூ. 10 லட்சத்தில் சிறிய சமுதாயக்கூடத்தை கட்டியமைத்தாா். இந்த சிறிய சமுதாயக் கூடத்தை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலா் மணிகண்டன் திங்கள்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். நிலக்கோட்டை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் எஸ்.பி.முருகேசன், தெய்வானை தம்பதியினா் வரவேற்றனா். இந்த நிகழ்ச்சியில், நிலக்கோட்டை பேரூா் திமுக செயலா் ஜோசப் கோவில் பிள்ளை, நிலக்கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com