பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவா்களுக்கு  சான்றிதழ்களை வழங்கிய நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி.   உடன் நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, கல்லூரி முதல்வா் கந்தசாமி.

பழனி பாலிடெக்னிக் கல்லூரியில் பரிசளிப்பு விழா

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் அனைத்து துறையைச் சாா்ந்த மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலயத்துறை சாா்பாக விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். துறைத் தலைவா்கள் பத்மநாபன், ரமேஷ், ராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, நகா்மன்றத் துணைத் தலைவா் கந்தசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகளை நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி வழங்கினாா். நிகழ்ச்சியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பாளா் ஜோதிலட்சுமி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் சக்திவேல், அலுவலக கண்காணிப்பாளா் ரவீந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com