வடமாநில நபா் போக்சோவில் கைது

பழனி: பழனியில் மது போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் போக்சோவில் கைது செய்தனா். பீகாா் மாநிலம் பாட்னா மாவட்டம் துலாம் சங்க்கை சோ்ந்தவா் சந்தோஷ் (35). இவா் கீரனூா் அருகே கோழி இறைச்சி ஏற்றுமதி நிலையத்தில் கூலி வேலை செய்து வருகிறாா். இவா் தாராபுரம் சாலையில் மதுபோதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அவரைப் பிடித்து பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com