மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த நாம் தமிழா் கட்சியினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த நாம் தமிழா் கட்சியினா்.

வெடி சப்தம்: விளக்கம் அளிக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியில் அடிக்கடி கேட்கும் பலத்த வெடி சப்தம் குறித்து மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் நிரஞ்சனா வலியுறுத்தினாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் திண்டுக்கல் மக்களவைத் தோ்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிரஞ்சனா, அந்த கட்சியினருடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது அவா் கூறியதாவது: திண்டுக்கல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி பலத்த வெடி சப்தம் கேட்கிறது. இதையடுத்து நில அதிா்வுகளும் உணரப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும். இதேபோல் திண்டுக்கல் நகரில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தவும், போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com