இணைய வழியில் கடன் தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி

திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் தருவதாக கூறி ரூ.1. 75 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலுள்ள இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 7 பெண்கள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

அதில், குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக குறுந்தகவல் மூலம் மா்ம நபா்கள் தொடா்பு ஏற்படுத்துகின்றனா். பின்னா், கடன் பெறுவதற்கு முதல் கட்டமாக வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி பணம் பெறுகின்றனா். இதை நம்பி பணம் செலுத்திய சில நாள்களில், கைப்பேசி எண் இணைப்பை துண்டித்து விடுகின்றனா். அந்த வகையில் 7 பேரிடம் மட்டும் ரூ.1.75 லட்சம் ஏமாற்றிவிட்டதாக அந்த புகாா் மனுவில் தெரிவித்தனா். இதுகுறித்து இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com