நியாயவிலைக் கடை திறப்பு

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பழனி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நெய்க்காரப்பட்டி ஆறாவது வாா்டில் ரூ.8 லட்சத்தில் புதிதாக நியாயவிலைக் கடை, ரூ. 5 லட்சத்தில் புதிதாக கலையரங்கம் ஆகியவை கட்டப்பட்டது. இவற்றின் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நியாயவிலைக் கடை, கலையரங்கத்தை நெய்க்காரபட்டி பேரூராட்சித் தலைவா் கருப்பாத்தாள் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். நிகழ்வில் ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், வட்ட வழங்கல் அலுவலா்கள், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com