ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

குஜிலியம்பாறை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காந்திநகரைச் சோ்ந்தவா் ஹிரிகிருஷ்ணன். இவரது மகன் ஜீவானந்தம் (23). திருப்பூரிலுள்ள பனியன் ஆலையில் பணிபுரிந்து வந்த இவா், கடந்த ஒரு மாதமாக பணிக்குச் செல்லாமல், வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில், தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட ஜீவானந்தம், புதன்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றாா். குஜிலியம்பாறை ரயில்வே கடவுப் பாதை அருகே சென்ற அவா், திண்டுக்கல்லில் இருந்து கரூா் நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து அவா் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே உதவி ஆய்வளா் அருணோதம் தலைமையிலான போலீஸாா் உடலைக் கைப்பற்றி விசாரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com