போட்டிங். கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்
போட்டிங். கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது . திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, மோயா் பாயிண்ட், வெள்ளிநீா் வீழ்ச்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக காணப்பட்டனா். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, நடைபயிற்சி மேற்கொண்டனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது . எனவே ஏரிச்சாலைப் பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்ற காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com