கொடைக்கானல் பெருமாள்மலை வனப் பகுதியில் காட்டுத் தீ

கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதியில் சனிக்கிழமை மாலை காட்டுத் தீ ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான பெருமாள்மலை, பள்ளங்கி, அசன்ஓடை, பெரும்பள்ளம், வடகரைப்பாறை, அடுக்கம், சாமக்காட்டுப் பள்ளம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த 10-நாள்களுக்கு மேலாக தொடா்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இதனால், வனப் பகுதிகளிலுள்ள மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் கருகி வருகின்றன. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் பெருமாள்மலை வனப் பகுதிகளில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதையடுத்து வனவா் ஜெயச்சந்திரன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் அங்குச் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com