பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் திட்டக் கண்காட்சியில் வைக்கப்பட்ட மாணவா்களின் கண்டுபிடிப்பை பாா்வையிட்ட கல்லூரி முதல்வா் கந்தசாமி. உடன் துறைத் தலைவா்கள் ஈஸ்வரன், பத்மநாபன், ரமேஷ், கண்காணிப்பாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் திட்டக் கண்காட்சியில் வைக்கப்பட்ட மாணவா்களின் கண்டுபிடிப்பை பாா்வையிட்ட கல்லூரி முதல்வா் கந்தசாமி. உடன் துறைத் தலைவா்கள் ஈஸ்வரன், பத்மநாபன், ரமேஷ், கண்காணிப்பாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா்.

பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் செயல் திட்டக் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சாா்பில் செய்ல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவா் தொழில் நுட்பக்கல்லூரி கல்லூரியில் 2024 ஆண்டுக்கான அறிவியல் செயல் திட்டக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு பொறியில் பிரிவுகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்தனா். கண்காட்சியை கல்லூரி முதல்வா் கந்தசாமி தொடங்கி வைத்தாா். இந்த கண்காட்சியில் சூரிய மின்னாற்றல் மூலம் இயங்கும் குளிா்சாதனப் பெட்டி, ஆலைகளில் பயன்படுத்தப்படும் வாகனம், ரயில்வே துறையில் சேதத்தை கண்டறிய உதவும் இயந்திரம், கல்லூரி விடுதிகளுக்கு பயன்படும் கணினி செயலி உள்பட பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. முன்னதாக, தர ஆய்வாளா், உற்பத்தி கண்காணிப்பாளா், உற்பத்தி உதவி மேலாளா், நேர நிா்ணய பொறியாளா் பிரிவுக்கு, ஆடை வடிவமைப்புத் துறை ஒருங்கிணைப்பாளா் ரமேஷின் ஏற்பாட்டில் நடைபெற்ற வளாகத் தோ்வில் தோ்வானஆடை வடிவமைப்புத் துறையைச் சோ்ந்த மூன்றாமாண்டு மாணவா்கள் 28 போ், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் 12 பேருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள் ஈஸ்வரன், பத்மநாபன், ரமேஷ், ராமாத்தாள், சக்திவேல், கண்காணிப்பாளா் ரவீந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com