ரயிலில் அடிபட்டு முதியவா் பலி

திண்டுக்கல் அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா்உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் (84). இவருக்கு கண் பாா்வை, கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஏ.வெள்ளோடு அடுத்த கரிசல்பட்டி அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற ரயிலில் எதிா்பாராதவிதமாக அடிபட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மணிகண்டன் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com