துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்

மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொதுத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 144-இன் கீழ் படைக்கலன்களை பொது இடங்களுக்கு எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உரிமதாரா்கள் தங்களது எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்துக்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com