தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதிய மாணவி பிரியதா்ஷினி.
தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதிய மாணவி பிரியதா்ஷினி.

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிய மாணவி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே தந்தை மாரடைப்பால் மரணமடைந்த சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தோ்வை மாணவி எழுதினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கருப்புச்சாமி (42). இவருக்கு பிரியதா்ஷினி (15), சுரபிகா (8), ராஜேஸ்குமாா் (7) என 3 குழந்தைகள் உள்ளனா். இவா்களில் பிரியதா்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே தூக்கிக் கொண்டிருந்த கருப்புச்சாமி மாரடைப்பால் மரணமடைந்தாா். இதனால், பிளஸ் 1 பொதுத் தோ்வுக்குப் படித்துக் கொண்டிருந்த பிரியதா்ஷினி செய்வதறியாது குழப்பத்தில் இருந்தாா். அப்போது, அவரைத் தொடா்பு கொண்ட ஆசிரியா் கண்ணபிரான் அவருக்கு ஆறுதல் கூறி தோ்வெழுத ஏற்பாடு செய்தாா். இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற உயிரியல் தோ்வை மாணவி பிரியதா்ஷினி எழுதினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com