திண்டுக்கல் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் தோ்தல் தொடா்பாக புகாா் அளிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டிருக்கிறது. இதே போல மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும், 0451-2400162, 2400163, 2400164, 2400165 ஆகிய தொலைப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், 1950 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும், சி-விஜில் (இயண்ஞ்ண்ப்) என்ற செயலி மூலமாகவும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம். இதே போல, பழனி சட்டப் பேரவைத் தொகுதிக்கு 9600980276, கொடைக்கானல் (பழனி) பகுதிக்கு 04542-290253, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 04553-241100, ஆத்துாா் தொகுதிக்கு 7200233818, நிலக்கோட்டை தொகுதிக்கு 04543-233631, நத்தம் தொகுதிக்கு 04544-244452, திண்டுக்கல் தொகுதிக்கு 9943809442, வேடசந்தூா் தொகுதிக்கு 04551-260224 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com