விபத்தில் பலியான தொப்பம்பட்டி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சண்முகராஜ்.
விபத்தில் பலியான தொப்பம்பட்டி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சண்முகராஜ்.

அதிமுக ஒன்றியச் செயலா் விபத்தில் பலி

பழனியருகே 2 காா்கள் நேருக்கு நோ் மோதியதில் பலத்த காயமடைந்த தொப்பம்பட்டி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சண்முகராஜ் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தொப்பம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலா் சண்முகராஜ் (65). வயலூரைச் சோ்ந்த இவா், மாா்ச் 3-ஆம் தேதி திண்டுக்கலில் நடைபெற்ற அதிமுக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க காரில் சென்றாா். அப்போது வயலூரை அடுத்த புஷ்பத்தூா் அதிவிரைவு நெடுஞ்சாலையில் உள்ள பாலத்துக்கு கீழே எதிரே வந்த காா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சண்முகராஜ் உயிரிழந்தாா். இதையடுத்து, பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் அங்கு கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா் வயலூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com