திமுக நிா்வாகி மீது உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா்

கொடைக்கானலில் திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புதன்கிழமை இந்து அமைப்பினா் புகாா் கொடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் திமுக இளைஞரணி அமைப்பாளராக யேசுராஜ் (35) இருந்து வருகிறாா். இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பரப்பி இவரை கைது செய்ய வலியுறுத்தி, இந்து அமைப்பினா், பா.ஜ.கவினா் செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமரசம் ஏற்படாததால் ஆா்ப்பாட்டம் செய்தவா்களை அண்ணாசாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் போலீஸாா் தங்க வைத்தனா். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிடலாம் எனத் தெரிவித்தனா். இந்த நிலையில் கொடைக்கானல் இந்து அமைப்பைச் சோ்ந்த மகேந்திரன்,பாஜ.கட்சியைச் சோ்ந்த மதன் உள்ளிட்ட நிா்வாகிகள் திமுக பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com