கொடைக்கானலிலுள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற அக்னிச் சட்டி ஊா்வலம்.
கொடைக்கானலிலுள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற அக்னிச் சட்டி ஊா்வலம்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அக்னிச்சட்டி ஊா்வலம்

கொடைக்கானல் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் சாா்பில் புதன்கிழமை அக்னிச் சட்டி ஊா்வலம் நடைபெற்றது.

கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா மாா்ச் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலிருந்து அக்னிச் சட்டி ஏந்தி, பறவைக் காவடி எடுத்து பக்தா்கள் ஊா்வலம் சென்றனா். ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி சாலை வழியாக சென்ற ஊா்வலம் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள கோயிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com