காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

விபத்து வழக்கில் ஆஜராகாததால் காவல் ஆய்வாளருக்கு, திண்டுக்கல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்தவா் ராசு. இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு, தாடிக்கொம்பு அருகே நடந்து சென்றபோது வாகன விபத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க விசாரணை அதிகாரியான, தற்போது திருப்பூா் மாவட்டம், நல்லூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் பாலமுருகனுக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும், அவா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலமுருகனுக்கு பிடியாணை பிறப்பித்து தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெ.மோகனா உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com