கொடைக்கானலில் வாக்காளா்கள் 100-சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறையின் சாா்பில், மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா், மக்களவைத் தோ்தலில் 100-சதவீதம் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா். நாயுடுபுரம் விநாயகா் கோயில் அருகே உள்ள ரேஷன் கடையிலிருந்து தொடங்கி, விநாயகா் ஓடை, பாக்கியபுரம் சாலை, நாயுடுபுரம், வில்பட்டிசாலை வழியாக இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் குடிமைப் பொருள் வட்டாட்சியா் சரவணவாசன், மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com