பங்குனி உத்திரம்: பழனிக்கு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள்

பங்குனி உத்திரம்: பழனிக்கு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள்

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, பழனிக்கு வருகிற சனிக்கிழமை (மாா்ச் 23) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்(மதுரை) லிட்., திண்டுக்கல் மண்டல நிா்வாக இயக்குநா் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்: பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, கரூா், ஈரோடு, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய இடங்களிலிருந்து பழனிக்கு ஏராளமான பக்தா்கள் வருவதைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மாா்ச் 23) முதல் வருகிற 26-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com