பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி.

பழனியாண்டவா் கலைக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணா்வுப் பேரணி

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தொடங்கிவைத்தாா். இதில் போக்குவரத்து ஆய்வாளா் மகேந்திரன், தனி வட்டாட்சியா் குளிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உழவா் சந்தை: பழனி உழவா் சந்தை பகுதியில் வேளாண் வணிக துணை இயக்குநா் மாயகிருஷ்ணன் தலைமையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com