மருத்துக் கழிவு சுத்திகரிப்பு நிலைய கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

நிலக்கோட்டை அருகே தனியாா் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த நூதுலாபுரம் கிராமத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியா் தலைமையில், நிலக்கோட்டையை அடுத்த எஸ்.தும்மலப்பட்டி கிராமத்திலுள்ள பாலசுப்பிரமணியா் கோயில் வளாகத்தில் வருகிற 27-ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com