கொடைக்கானலில் அகற்றப்படாத
குப்பைகளால் சுகாதாரக்கேடு

கொடைக்கானலில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு

படவிளக்கம்.டஸ்ட். கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள். கொடைக்கானல், மாா்ச் 22: கொடைக்கானல் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இங்குள்ள அண்ணா சாலை, பிரகாசபுரம் சாலை, பாக்கியபுரம், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததால் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் நிலவுகிறது. மேலும் இறைச்சிக் கழிவுகளை வில்பட்டி செல்லும் வழியில் உள்ள வனப் பகுதிகளிலும், பெருமாள்மலை செல்லும் மலைச் சாலைப் பகுதியான கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள வனப்பகுதிகளிலும் பலா் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். இதனால் இந்தப் பகுதிகளிலும் துா்நாற்றம் வீசுகிறது. இதனிடையே குப்பைகளில் கிடக்கும் இறைச்சிக் கழிவுகளை உள்கொள்ளும் தெருநாய்களுக்கு வெறிப்பிடித்து அந்த வழியாக வாகனங்களில் செல்வோரை கடிக்கின்றன. இவற்றிடமிருந்து தப்ப வேகமாகச் செல்லும் போது வாகன ஓட்டிகள் பலா் கீழே விழுந்து காயமடைகின்றனா். இதே போல, காட்டுப் பன்றிகளும் இந்த இறைச்சிக் கழிவுகளை உண்ண வருவதால் மாலை நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே நகா்ப் பகுதிகளிலும், மலைச்சாலை வனப் பகுதிகளிலும் கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதுடன், குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com