உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3.10 கோடி தங்க நகைகள் பறிமுதல்

வத்தலகுண்டு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3.10 கோடி தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். வத்தலகுண்டு அருகே புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி அலுவலா்கள் சோதனை நடத்தினா். இதில் ரூ.3.10 கோடி மதிப்பிலான 3,619.252 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த மதுரையைச் சோ்ந்த முத்துகணேஷ் (50) உள்ளிட்ட மூவரிடம் வட்டாட்சியா் தனுஷ்கோடி உள்ளிட்ட அலுவலா்கள் நடத்திய விசாரணையில் அந்த நகைகள், பல்வேறு கடைகளில் இருந்து மதுரையில் உள்ள பிரபல நகைக் கடைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. உரிய ஆவணங்களைக் காண்பித்துவிட்டு, நகைகளைப் பெற்றுச் செல்லலாம் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com