இளைஞா் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த சிகேசிஎம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் வீரா கெளதம் (26). கஞ்சா விற்பனை செய்ததாக, இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், வீரா கெளதமை அவரது வீட்டின் அருகிலேயே மா்மநபா்கள் ஞாயிற்றுக்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா். பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த கொலைக்கான காரணம் குறித்து, திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com