கொடைக்கானலில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்வதவா்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி ஊா்வலமாக சென்ற கிறிஸ்தவா்கள்
கொடைக்கானலில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்வதவா்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி ஊா்வலமாக சென்ற கிறிஸ்தவா்கள்

கொடைக்கானலில் குருத்தோலை ஞாயிறு பவனி

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதி திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளானோா் கலந்து கொண்டனா். இதேபோல உகாா்த்தேநகா், அற்புத குழந்தையேசு ஆலயம், நாயுடுபுரம், சீனிவாசபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com