ஸ்ரீராம அழகா் சுவாமி தேவஸ்தானம் குழுவுக்கு புதிய தலைவா் தோ்வு

சின்னாளபட்டி ஸ்ரீராம அழகா் சுவாமி தேவஸ்தான குழுவுக்கு புதிய தலைவராக எஸ்.வி.சண்முகம், ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 97 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவை நடத்தி வரும், ஸ்ரீராம அழகா் தேவஸ்தான குழுத் தலைவராக, எல்.கணேஷ் பிரபு இருந்து வந்தாா். அண்மையில் அவா் பதவி விலகியதையடுத்து, புதிய தலைரை தோ்ந்தெடுக்கும் நிகழ்ச்சி சின்னாளபட்டி பிரிவில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தேவஸ்தான குழு பரம்பரை நாட்டாமை கே.ராஜேஸ் தலைமை வகித்தாா். செயலா் பாலசுப்பிரமணி, பொருளாளா் எம்.சாந்தகுமாா், உதவித் தலைவா் பாண்டியராஜன், முன்னாள் தலைவா் சுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில், புதிய தலைவராக எஸ்.வி.சண்முகம் போட்டியின்றி ஒரு மனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு பரம்பரை நாட்டாமை கே.ராஜேஸ், தேவஸ்தான குழுவினா் வாழ்த்து தெரிவித்தனா். இதில், தேவஸ்தான குழுவைச் சோ்ந்த முன்னாள் செயலா் வழக்குரைஞா் செல்வராஜ், கீழக்கோட்டை தேவாங்கா் மகாசபை தலைவா் ராமலிங்கம், செயலா் முருகன், பொருளாளா் மீனாட்சிசுந்தரம், திமுக நகர செயலா் மோகன்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com