சாதனையை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத திமுக அணி: எஸ்டிபிஐ முபாரக்

கடந்த 5 ஆண்டுகளாக செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க முடியவில்லை என எஸ்டிபிஐ வேட்பாளா் முகமது முபாரக் தெரிவித்தாா்.

திமுக அணியினா், திண்டுக்கல் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க முடியவில்லை என எஸ்டிபிஐ வேட்பாளா் முகமது முபாரக் தெரிவித்தாா். திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த பின், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் தொகுதியிலேயே இருந்து மக்கள் பணியாற்றுவேன். மாவட்டத்தின் தொழில் வளா்ச்சி, சுற்றுலா மேம்பாடு, ஆன்மிகத் தலத்துக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வேன். அதிமுகவின் வலுவான கோட்டை என்பதால் தான், திண்டுக்கல் தொகுதியை தோ்வு செய்து, எஸ்டிபிஐ களமிறங்கி இருக்கிறது. மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும் என விரும்பும் திண்டுக்கல் தொகுதி மக்கள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால் எனக்கு மிகுந்த வரவேற்பை அளித்து வருகின்றனா். பண பலத்தால் சாதித்துவிட முடியும் என நம்பிக்கை கொண்டுள்ள திமுக அணி, கடந்த 5 ஆண்டுகளில் திண்டுக்கல் தொகுதிக்கு நிறைவேற்ற திட்டங்களை, சாதனையை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத நிலையில் உள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com