கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விசுவநாதன்.
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விசுவநாதன்.

கொடைக்கானலில் அதிமுக கூட்டணி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோா் தலைமை வகித்து, அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரும், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவருமான முகமது முபாரக்கை அறிமுகம் செய்து வைத்துப் பேசினா். இதில் வேட்பாளா் முகமது முபாரக் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டம் பூட்டுக்கு பெயா் போனது. சுற்றுலாத் தலங்கள், ஆன்மிகத் தலங்கள் நிறைந்த பகுதி. இந்தத் தொகுதியை முன்னேற்றுவதுதான் எனது முக்கியப் பணியாக இருக்கும். என்றாா் அவா். கூட்டத்தில் அதிமுக முன்னாள் நகரச் செயலா்கள் கோவிந்தன், வெங்கட்ராமன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, கொடைக்கானல் மேல்மலைப் பகுதி ஒன்றியச் செயலா் தாமோதரன், கீழ்மலை ஒன்றியச் செயலா் சண்முகசுந்தரம், தே.மு.தி.க. நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கட்சியின் நகரச் செயலா் ஸ்ரீதா் வரவேற்றாா். நகரத் துணைச் செயலா் ஜாபா் சாதிக் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com