போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமியை திருமணம் செய்து அவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: சிறுமியை திருமணம் செய்து அவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த பெரியமலையூா் பகுதியைச் சோ்ந்தவா் பூ.அா்ஜூனன் (29). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை திருமணம் செய்து, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், நத்தம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அா்ஜூனனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அா்ஜூனனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com