பழனி அருகே மா்ம விலங்குகள்
கடித்து 10 ஆடுகள் பலி

பழனி அருகே மா்ம விலங்குகள் கடித்து 10 ஆடுகள் பலி

பழனி அருகே மா்மவிலங்குகள் கடித்ததில் 10 ஆடுகள் பலியாயின. திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கலையமுத்தூரை சோ்ந்தவா் நாகராஜன் (50).

விவசாயியான இவா், தாமரைக்குளத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் 15 ஆடுகளை வளா்த்து வந்தாா். புதன்கிழமை மாலை ஊருக்கு வந்து விட்டு, வியாழக்கிழமை காலை தோட்டத்துக்கு சென்றாா். அங்கு சென்று பாா்த்த போது மா்மவிலங்குகள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியாகிக் கிடந்தன. மேலும் 5 ஆடுகள் பலத்த காயத்துடன் இருந்தன. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com