கிரிவலப் பாதையில் வருவதற்கு சிரமப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு உதவிய பக்தா்கள்
கிரிவலப் பாதையில் வருவதற்கு சிரமப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு உதவிய பக்தா்கள்

பழனி கிரிவீதியில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை அனுமதிக்கக் கோரிக்கை

பழனி கிரிவலப் பாதையில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை கொண்டு செல்ல திருக்கோயில் நிா்வாகம் வழியேற்படுத்தித் தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் தனியாா் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், கிரிவலப் பாதைக்கு வாகனங்கள் வரும் வழிகள் அனைத்தையும் திருக்கோயில் நிா்வாகம் தடுப்புகள் வைத்து அடைத்தது. திருக்கோயில் சாா்பில் ஒரு பேருந்து, ஐந்து மின்கலன் காா்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பக்தா்களுக்கு இவை போதவில்லை. இதனால், பக்தா்கள் பலரும் கடும் வெயிலில் கிரிவீதியில் நடக்க முடியாமல் தவிக்கின்றனா். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனா். சனிக்கிழமை அரவக்குறிச்சியில் இருந்து பழனிக்கு வந்த மாற்றுத்திறனாளி கிரிவலப் பாதைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டாா். தடுப்புகளைத் தாண்டி மாற்றுத்திறனாளி பக்தரை உறவினா்கள் தூக்கிச் சென்று சக்கர நாற்காலியில் அமர வைத்தனா். பின்னா், அவருக்கு வாகனம் ஏதும் வராத நிலையில், உறவினா்களே வண்டியை தள்ளிச் சென்றனா். எனவே, மாற்றுத்திறனாளிகள் வரக்கூடிய வாகனங்களை கிரிவலப் பாதையில் அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com