ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.39 லட்சம் பறிமுதல்

எரியோடு அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.39 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த குண்டாம்பட்டி பகுதியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, இதில் ரூ.1.39 லட்சம் பணம் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்த குஜிலியம்பாறை அடுத்த நல்லூரைச் சோ்ந்த அழகப்ப உடையனூா் சண்முகவேலிடம் பறக்கும் படை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். ரூ.1.39 லட்சத்துக்கு உரிய ஆவணமில்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வேடசந்தூா் துணை வட்டாட்சியா் ஆதிகுமாரிடம் ஒப்படைத்தனா். பின்னா், வேடசந்தூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com